Amazon.in || Book ||

Wednesday, 27 December 2017

‘வாங்க பழகலாம்’- மகளுக்கு வரன் பேசுவது போல் மாப்பிள்ளை வீட்டில் பழகி ரூ.2 லட்சம் திருட்டு: பெண்ணின் தந்தை கைது



மகனுக்கு பெண் தேவை என்று பேப்பரில் கொடுக்கப்பட்ட விளம்பரத்தை பார்த்து தனது மகளுக்கு உங்கள் மகனை பார்க்க வந்திருக்கேன் என்று பேசி விருந்து சாப்பிட்டு விட்டு பீரோவில் இருந்த 2 லட்சம் பணத்தை திருடிச்சென்ற நபரை போலீஸார் கைது செய்தனர்.

சென்னை மாதவரம் சாமி நகர் 200 அடி சாலையில் வசிப்பவர் சுப்ரமணியம்(64), ஒய்வு பெற்ற அரசு ஊழியர். இவருக்கு ஒருமகள். மற்றும் ஒரு மகன் உள்ளனர். மகளுக்கு திருமணம் முடிந்து கணவரோடு வெளியூரில் வசிக்கிறார். மகன் பெயர் ராம்குமார் தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறார்.


இந்நிலையில் தன்னுடைய மகனுக்கு பெண் தேடி வந்த சுப்ரமணி இது குறித்து திருமண தகவல் மையம் மூலம் விளம்பரம் செய்திருந்தார். இதைப்பார்த்த கோவையைச் சேர்ந்த ஒருவர் சுப்ரமணியை தொடர்பு கொண்டு தன் பெயர் கிருஷ்ணமூர்த்தி எனவும் தாம் கோவையில் பிரபல நிறுவனத்தில் தொழில் நுட்பப் பிரிவு கண்காணிப்பு துறையில் அதிகாரியாக வேலை பார்பதாகவும் தன்னுடைய மகள் கோவையி்ல் பிரபல கல்லூரியில் இறுதியாண்டு படித்து வருதாகவும் அளந்து விட்டுள்ளார்.

இந்த வருட துவக்கத்தில் தன்னுடைய மகளுக்கு திருமணம் செய்ய தாம் முடிவு செய்து வரன் தேடிய போது உங்களுடைய மகன் குறித்து விவரங்களை பார்த்தேன், நீங்கள் சம்மதித்தால் நான் நேரில் வந்து மற்ற விவரங்கள் குறித்து பேசுகிறேன் என்று கூறியுள்ளார்.

இதைக்கேட்டு மகிழ்ச்சி அடைந்த சுப்ரமணி தன்னுடைய முகவரியை அவரிடம் தெரிவித்து சென்னை வருமாறு அழைத்துள்ளார். இதையடுத்து கடந்த 13-ம் தேதி அந்த நபர் தடபுடலாக சென்று சுப்ரமணி வீட்டில் இறங்கியுள்ளார். அனைவரிடமும் சகஜமாக சந்தோஷமாக பேசியுள்ளார்.

பெண்ணின் படம் என்று லட்சணமான ஒரு பெண்ணின் படத்தை காட்டி தனது வேலை சம்பாத்தியம், குடும்பம் பற்றி பெரிதாக பேசி வீட்டில் உள்ளவர்கள் மனதை கவர்ந்து விட்டார்.

நமது மகனுக்கு அருமையான பெண்ணும் அதைவிட அருமையான சம்பந்தியும் கிடைத்து விட்டார் என்று சுப்ரமணி குடும்பமே சந்தோஷத்தில் ஆழ்ந்தனர். சரி நான் எங்காவது ஓட்டலில் தங்கிவிட்டு இரவு ஊருக்கு கிளம்புகிறேன் என்று கிருஷ்ணமூர்த்தி சொல்ல “என்ன வெளியில் தங்குவதா? எங்கள் சம்பந்தி ஆகப்போகிறவர் நீங்கள், எங்கேயும் போய் தங்கக்கூடாது இங்கேயே சாப்பிட்டு ரெஸ்ட் எடுத்துவிட்டு போகலாம் என்று கூறி சுப்ரமணியத்தின் அறையிலேயே தங்க வைத்துள்ளனர்.

உண்ட மயக்கத்தில் அனைவரும் உறங்கி மாலையில் எழுந்துள்ளனர். பின்னர் இரவு அனைவரிடமும் சந்தோஷமாக விடைப்பெற்று கிருஷ்ணமூர்த்தி கிளம்பி ஊருக்கு போயுள்ளார். போகும் போது சுப்ரமணி வங்கியில் செலுத்த வைத்திருந்த ரூ.2 லட்சத்தையும் எடுத்துக்கொண்டு போய் விட்டார்.

மறுநாள் சுப்ரமணி வங்கியில் செலுத்துவதற்காக பணத்தை எடுக்க பீரோவை திறந்தபோது பணத்தை காணவில்லை. வீட்டில் தங்கியிருந்த கிருஷ்ணமூர்த்தி பணத்தை திருடிச்சென்றது தெரியவந்தது. இதுபற்றி சுப்ரமணி மாதவரம் காவல்துறையில் புகார் அளித்தார். பின்னர் விசாரணை நடத்திய மாதவரம் போலீஸாருக்கு கிடைத்த ஒரே தடயம் கிருஷ்ணமூர்த்தியின் போன் நம்பர். அதை வைத்து கிருஷ்ணமூர்த்தி செல்போன் என்னை தொடர்பு கொண்டபோது அது சுவிட்ச் ஆப் செய்யபட்டிருந்தது.

இதனையடுத்து இரு நாட்கள் கழித்து செல்போன் உபயோகப்படுவது போலீஸாரின் கண்காணிப்பில் தெரிந்தது. இதையடுத்து செல்போன் சிக்னலை கொண்டு கோவை சென்ற போலீஸார் கிருஷ்ணமூர்த்தியை கையும் களவுமாக பிடித்தனர்.

போலீஸ் விசாரணையில் பணத்தை திருடியதை கிருஷ்ண மூர்த்தி ஒப்புக்கொண்டார். மேலும் போலீஸார் நடத்திய விசாரணையில் கிருஷ்ணமூர்த்தியின் உண்மையான பெயர் ர் சந்தான கோபாலன் என்றும் திருச்சி ஸ்ரீரங்கம் வடக்கு அட்சய விநாயகபுரம் தெருவை சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது.

இதே போல் அவர் கரூர், ஈரோடு மற்றும் பல இடங்களில் வரன் பார்ப்பது போல சென்று பணம் மற்றும் நகைகளை திருடியது தெரியவந்தது

No comments:

Post a Comment

Amazon.in || Kids zone ||

PropellerAds