எகிறிய ஆர்காம் பங்குகள்;
முன்றே மாதத்தில் கடன் க்ளோஸ்...
ஆர்காம் நிறுவனத்திற்கு ரூ.45,000 அளவில் கடன் உள்ளது. இந்த கடன் தொகையில் ரூ.39,000-தை மார்ச் மாதத்திற்குள் திருப்பி செலுத்திவிடுவேன் என அனில் அம்பானி தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்து அவர் பேசியிருப்பதாவது, ஆர்காம் நிறுவனத்துக்கு புதிய முதலீட்டாளர் ஒருவரை கொண்டு வர இருக்கிறோம்.
கடனுக்காக ஆர்காம் பங்குகளை மாற்றும் நடவடிக்கை எதுவும் எடுக்கப்பட மாட்டாது. அதேபோல் கடனை மறு சீரமைப்பு செய்யும் நடவடிக்கையில் இருந்து வெளியேறுகிறோம். தற்போது ரூ.45,000 கோடி அளவுக்கு கடன் இருக்கிறது. வரும் மார்ச் மாதத்துக்குள் ரூ.39,000 கோடியை அடைப்போம்.
அப்போது நிறுவனத்தின் கடன் ரூ.6,000 கோடியாக இருக்கும். ஸ்பெக்ட்ரம், டவர் மற்றும் ரியல் எஸ்டேட் சொத்துகள் மூலம் ரூ.25,000 கோடி கிடைக்கும் என தெரிகிறது. இதன் மூலம் அனைத்து கடனில் இருந்து ஆர்காம் விரைவில் விடுபடும்.
கடன் தீர்ந்த பின்னர் ஆர்காம் புதிய நிறுவனமாக மாறும். 4ஜி டேட்டா பகிர்தல், டேட்டா சென்டர் உள்ளிட்ட தொழில்களில் ஈடுபடும். 50 சதவீத வருமானம் வெளிநாடுகளில் இருந்து வரும் என தெரிவித்துள்ளார்.
கடந்த ஒரு வார காலமாக ஆர்காம் நிறுவன பங்குகள் உயர்ந்த வண்ணம் உள்ளது. கடந்த வார இறுதியில் ரூ.3,438 கோடியாக இருந்த சந்தை மதிப்பு தற்போது ரூ.7,948 கோடியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment