பாட்னா : திறப்பு விழா நடப்பதற்கு ஒரு நாள் முன்னதாக ரூ.389.31 கோடி செலவில் கட்டப்பட்ட அணையின் ஒரு பகுதி இடிந்து விழுந்துள்ள சம்பவம் பீகாரில் நடந்துள்ளது.
பீகாரில், கதேஸ்வர் பன்த் கால்வாய் திட்டம் ரூ.389.31 கோடி மதிப்பில் நிறைவேற்றப்பட்டு வருகிறது. 1977 ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்ட இந்த அணை கட்டும் திட்டம், பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டு இருந்தது. முதல்வராக நிதிஷ்குமார் பொறுப்பேற்ற பிறகு மீண்டும் இத்திட்டம் கையில் எடுக்கப்பட்டு, அணை கட்டப்பட்டு வந்தது. அணை கட்டி முடிக்கப்பட்டு நேற்று, முதல்வர் நிதிஷ்குமாரால் திறக்கப்பட இருந்தது.
இந்நிலையில், அணை முழு கொள்ளளவை எட்டியதால், அணையிலிருந்து தண்ணீர் முழுவதும் திறந்து விடப்பட்டது. இதனால் நீரின் வேகத்தை தாங்க முடியாமல் அணையின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இச்சம்பவத்தால் அணை திறப்பு விழா, கடைசி நிமிடத்தில் ரத்து செய்யப்பட்டது.
அணையின் ஒரு பகுதி இடிந்ததால், அதில் சேமிக்கப்பட்ட நீர் ஊருக்குள் புகுந்துள்ளது. பல வீடுகள் நீரில் மூழ்கி உள்ளன. கால்வாயில் இருந்து பெறப்படும் நீரை சேமித்து வைப்பதற்காகவே இந்த அணை கட்டப்பட்டதாகவும், அதனால் அணை இடிந்தாலும் அது விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது எனவும் அம்மாநில நீர்வளத்துறை அமைச்சர் லாலன் சிங் தெரிவித்துள்ளார். உடைந்த அணையில் இருந்து நீர் வெளியேறுவதை மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து பார்த்து சென்றனர்.

No comments:
Post a Comment