Amazon.in || Book ||
Tuesday, 19 September 2017
நீட் தேர்வு
சென்னை:நீட் தேர்வுக்கு தயாராக மாணவர்களுக்கு ஏன் அரசு விழிப்புணர்வு ஏற்படுத்தவில்லை என தமிழக அரசுக்கு ஐகோர்ட் கேள்வி எழுப்பி உள்ளது.
நீட் தேர்வு குறித்து மாணவி கிருத்திகா தொடர்ந்த வழக்கில் நீதிபதி கிருபாகரன் எழுப்பி உள்ள கேள்விகளாவது: நீட் தேர்வில் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் தமிழக மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதா நீட் தேர்வுக்கு எதிராக தமிழகத்தில் எத்தனை பேராட்டங்கள் நடைபெற்றுள்ளது. அரசியல் கட்சியினரை தவிர்த்த வேறு தனியார் அமைப்புகள் போராட்டங்களை தூண்டி விடுகிறதா.
மாணவர்கள், அரசியல் கட்சிகள், ஈடுபட்ட போரட்டங்கள் எத்தனை? நீட் தேர்வுக்கு எதிரான போராட்டங்கள் அமைதியாக நடைபெற்றதா? போராட்டங்கள் தொடர்பாக எத்தனை மாணவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளன? போராட்டத்தில் ஈடுபட்டதாக எத்தனை பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்? வழக்குகளால் ஏற்படும் பின் விளைவுகள் குறித்து ஏன் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த கூடாது இவ்வாறு நீதிபதி கேள்வி எழுப்பி உள்ளார். இதற்கான பதிலை அரசு நாளை அளிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment