Amazon.in || Book ||

Wednesday, 20 September 2017

18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கத்திற்கு தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு

சென்னை: முதல்வர் பழனிசாமிக்கு எதிராக கவர்னரிடம் மனு அளித்ததால் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் 18 பேரை தகுதிநீக்கம் செய்து சபாநாயகர் தனபால் செப்.,18 ம் தேதி உத்தரவிட்டார். கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சபாநாயகர் கூறி இருந்தார். சபாநாயகரின் இந்த உத்தரவிற்கு எதிராக 18 எம்.எல்.ஏ.,க்களும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். 

காரசார வாதம் :
இந்த வழக்கின் விசாரணை சென்னை ஐகோர்ட்டில் நீதிபதி துரைசாமி முன்னிலையில் பகல் 12.10 மணியளவில் துவங்கியது. இதில் கவர்னர், முதல்வர், சபாநாயகர், தினகரன் ஆகியோர் தரப்பில் கபில் சிபில், சல்மான் குர்ஷித், துஷ்யந்த் தவே, அரியமா சுந்தரம் உள்ளிட்ட சுப்ரீம் கோர்ட் மற்றும் ஐகோர்ட் மூத்த வழக்கறிஞர்கள் பலர் ஆஜராகி வாதிட்டனர். தினகரன் தரப்பில் துஷ்யந்த் தவே ஆஜராகி வாதிட்டார். தொடர்ந்து சபாநாகர் தனபால் சார்பில் அரியமா சுந்தரம் வாதிட்டார். தினகரன் தரப்பில் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு எதிராக வாதங்களை முன்வைத்தார். கோர்ட்டில் அரசுகளை குறை கூறக்கூடாது. இது வழக்கிற்கு தேவையற்றது என அரியமா சுந்தரம் தெரிவித்தார்.

அவகாசம் கேட்பு :

தினகரன் தரப்பை தொடர்ந்து சபாநாயகர் தனபால் சார்பில் வழக்கறிஞர் அரியமா சுந்தரம் வாதிட்டார். அப்போது எம்.எல்.ஏ.,க்கள் தகுதிநீக்கம் தொடர்பான ஆவணங்கள் தாக்கல் செய்ய 10 நாட்கள் அவகாசம் வேண்டும் என சபாநாயகர் சார்பில் கேட்கப்பட்டது. அதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது எனவும் கேட்கப்பட்டது. காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்ட தொகுதிகளுக்கு தேர்தல் அறிவிக்காமல் இருக்க அவகாசம் தேவை எனவும் கேட்கப்பட்டது. நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்த தயாராக உள்ளோம். 

நீதிபதி உத்தரவு :

18 எம்.எல்.ஏ.,க்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில் நம்பிக்கை ஓட்டெடுப்புக்கு ஏன் தடை விதிக்கக் கூடாது? நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்தக் கூடாது என்ற உத்தரவு மறுஉத்தரவு வரும் வரை நீட்டிக்கும். மறுஉத்தரவு வரும் வரை சட்டசபையில் நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்தக் கூடாது. 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு சபாநாயகர் விளக்கம் அளிக்க வேண்டும் என நீதிபதி துரைசாமி உத்தரவிட்டுள்ளார். விசாரணை அக்.4ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.
ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவு இன்று (செப்.20) முடியும் நிலையில், தடை நீட்டிக்கப்பட்டது.சபாயாகர், முதல்வர், தலைமை செயலாளர், கொறடா ஆகியோர் பதில் அளிக்கவும் உத்தரவிடப்பட்டது.


தகுதி நீக்கத்திற்கு தடை இல்லை:
தினகரன் தரப்பின் முக்கிய கோரிக்கையான, 18 எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் விதித்த தடையை நீக்க வேண்டும் என்பதை ஏற்க கோர்ட் மறுத்து விட்டது.
அதே நேரம், 18 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கக் கூடாது என்றும் கோர்ட் உத்தரவிட்டது

No comments:

Post a Comment

Amazon.in || Kids zone ||

PropellerAds