குலதெய்வம்
குலத்தினை காக்கும் தெய்வம்
குலதெய்வம் ஆகும்.
தெய்வங்களில் மிகவும்
வலிமையான தெய்வம்
குல தெய்வம் ஆகும்.
குல தெய்வமே நமக்கு
எளிதில் அருளினை தரும்.
மேலும் மற்ற தெய்வ
வழிபாடுகளின் பலன்களையும்
பெற்று தரும்.
குலதெய்வம் பெரும்பாலும்
சிறு தெய்வமாகவே காணப்படும்.
ஆனால் அதன் சக்தியை அளவிடமுடியாது.
சிறு தெய்வம் என்று
அலட்சியப் படுத்தக்கூடாது.
எமன் கூட ஒருவரின்
குலதெய்வத்தின் அனுமதி
பெற்று தான் உயிரை எடுக்க முடியும்.
கர்ம வினை அதிகமாக இருந்தால்
குல தெய்வம் மறந்து போகும்.!
குலதெய்வம் என்பது நமது
முன்னோர்களில் தெய்வமாக
மாறிவிட்ட புண்ணிய
ஆத்மாக்கள் ஆகும்.
அந்த புனித ஆத்மாக்கள்
தங்களின் குலத்தினை
சார்ந்தவர்களை கண்ணும்
கருத்துமாக பேணிக்காக்கும்
வல்லமை படைத்தவை.
எனவே தான் அந்த தெய்வங்கள்
குலதெய்வங்கள் என்று
சிறப்புடன் அழைக்கப்படுகின்றன.
குலதெய்வங்களும்
கர்ம வினைகளை
நீக்க வல்லவை.
யாருக்கு
கர்மவினைகள் மிக அதிகமாக
இருக்கிறதோ அவருக்கு
குலதெய்வமே தெரியாமல்
போவதும் உண்டு.
பொதுவாக பெண்கள் மட்டும்
இரண்டு குல
தெய்வங்களை
வணங்குபவர்களாக
இறைவன் படைத்திருக்கிறான்.
பிறந்த வீட்டில் ஒரு தெய்வம்
புகுந்த வீட்டில் ஒரு தெய்வம்.
திருமணத்திற்கு முன் பிறந்த வீட்டின்
குலதெய்வத்தை வணங்குபவர்கள்
திருமணம் முடிந்தவுடன்
கணவனின் வீட்டில் உள்ள
குலதெய்வத்தை வணங்க
ஆரம்பிக்கிறார்கள்.
பிறந்தவீட்டின் குலதெய்வத்தை
வணங்குவது கிடையாது.
பிறந்த வீட்டின் குலதெய்வத்திற்கு
வருடத்திற்கு ஒரு முறை செய்யும்
வழிபாடு அவர்களை
ஆண்டு முழுவதும் காப்பாற்றும்.
புகுந்த வீட்டில் எந்த பிரச்சினையும்
சமாளிக்ககூடிய ஒரு ஆற்றலை தரும்.
இதுவரை யாரும் பிறந்த வீட்டின்
குலதெய்வத்திற்கு வழிபாடு
செய்யாமல் இருந்தால்
பிறந்த வீட்டின் குலதெய்வத்திற்கு
திரு விழாகாலங்களில்
வழிப்பாட்டை மேற்கொள்ளுங்கள்.
ஒருவரது குலம்
ஆல்போல் தழைத்து
அருகுபோல வேரூன்ற
வேண்டுமனால்
குலதெய்வவழிபாடு
மிக, மிக முக்கியம்.
குலதெய்வதோஷம் இருந்தால்,
மற்ற தெய்வங்களின்
அருள் கிடைக்காது.
குலதெய்வத்தின் அனுமதி அல்லது
அனுகிரகம்இல்லை என்றால்
ஒருவர் என்னதான்
சக்தி வாய்ந்த ஹோமம்,
யாகம் செய்தாலும்,
ஆலயங்களுக்கு சென்றாலும்
எதிர்பார்த்த பலன் தருமா என்பது
சந்தேகம்தான்.
எனவே உங்கள்
குலதெய்வத்தின்கோவிலுக்கு
அடிக்கடி
(குறைந்தது வருடம் ஒரு முறையாவது)
செல்லுங்கள்.
அபிஷேக ஆராதனைகள் செய்யுங்கள்.
அக்கோவிலுக்கு உதவுங்கள்.
பூஜைகள் நடைபெற ஏற்பாடு செய்யுங்கள்.
பிறகு பாருங்கள்
உங்கள்வாழ்க்கைபோகும் போக்கை…
அடிப்படையில் இந்துமதம்
பற்றற்ற தன்மையை போதிக்கிறது,
அதாவது அனைத்தையும்
துறந்து தியானம், தவம்மூலம்
இறை நிலையை அடைவது.
ஆனால் இந்த குலதெய்வம்
மனிதன் லௌகீக வாழ்க்கைக்கு
தேவையான பலன்களை
அளிக்கிறது...
மீள்பதிவு...
No comments:
Post a Comment