Amazon.in || Book ||

Friday, 15 December 2017

நான் ஓய்வு பெறுவதே சரி' மனம் திறந்த சோனியா: சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த காங்கிரஸ்








 நான் ஓய்வு பெறுவதே சரி' மனம் திறந்த சோனியா: சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த காங்கிரஸ்





தான் ஓய்வு பெறுவதே சரியானதாக இருக்கும், என சோனியா காந்தி தெரிவித்துள்ளது பல்வேறு சர்ச்சைகளைக் கிளப்பிய நிலையில். இவற்றிற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் காங்கிரஸ் கட்சி விளக்கம் அளித்துள்ளது.

தனியார் ஆங்கில தொலைக்காட்சி நிருபரின் கேள்விக்கு அவர் இக்கருத்தைத் தெரிவித்திருந்தார்.


நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இதில் கலந்துகொள்வதற்காக காலை நாடாளுமன்றத்துக்கு வருகைதந்த சோனியா காந்தியிடம் செய்தியாளர் ஒருவர், "நீங்கள் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்றக் குழுவின் தலைவராக தொடர்வீர்களா?" என்று கேள்வி எழுப்ப, "இனி நான் ஓய்வு பெறுவதே சரியான பங்களிப்பாக இருக்கும்" என சோனியா காந்தி கூறிச் சென்றார்.

நாளை (சனிக்கிழமை) காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி பொறுப்பேற்கவுள்ள நிலையில் சோனியா காந்தி இவ்வாறு கூறியிருப்பது பல்வேறு ஊகங்களுக்கு வழிவகுத்தது.

அவர் மக்களவையில் இருந்து ஒதுங்கியிருப்பதை அப்படிக் கூறினாரா இல்லை ஒட்டுமொத்த அரசியலில் இருந்தே விலகியிருப்பதைக் கூறினாரா என்பது விளங்காமல் இருந்தது. இது தேசிய அளவில் ஒரு விவாதப் பொருளாகவே மாறியது.

SoniaGandhi என்ற ஹேஷ்டேக்கின் கீழ் சமூகவலைதளங்களில் பலரும் தங்கள் கருத்துகளை பதிவிட்டுவந்தனர்.

இந்நிலையில், இது குறித்து காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சூரஜ்வாலா ட்விட்டரில் விளக்கமளித்துள்ளார்.

அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "ஊடக நண்பர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோளை முன்வைக்கிறேன். சோனியாவின் கருத்துகள் மீது எவ்விதமான மறைமுக தாக்கல்களுக்கும் இடம்தர வேண்டாம் என வேண்டுகிறேன். சோனியா காந்தி காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்தே ஓய்வு பெற்றுள்ளாரே தவிர தீவிர அரசியலில் இருந்து அல்ல.

காங்கிரஸ் கொள்கைகள் மீதான அவருடைய ஆழ்ந்த பிடிப்பும், ஞானமும் எங்களைத் தொடர்ந்து வழிநடத்தும். அவருடைய ஆசியுடன் நாங்கள் செயல்படுவோம்" எனத் தெளிவுபடுத்தியுள்ளார்.

காங்கிரஸில் கவுரவ பதவி..


இதற்கிடையில், காங்கிரஸ் கட்சியின் தலைவராக மிக அதிக காலம், (19 ஆண்டுகள்) பணியாற்றிய பெருமையை சோனியா காந்தி பெற்றுள்ளதால் அவருக்கு கட்சியின் கவுரவப் பதவி அளிக்க காங்கிரஸ் பரிசீலித்துவருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment

Amazon.in || Kids zone ||

PropellerAds