Amazon.in || Book ||

Sunday, 22 October 2017

நாடே பேசுது... இன்னும் மோடி மட்டும்தான் பேசல மெர்சல் பத்தி! #MersalVsModi



#MersalVsModi







சென்னை: உண்மையில் இயக்குநர் அட்லீயும், நடிகர் விஜய்யும் மெர்சல் இந்த அளவுக்கு பேசப்படும் படமாக மாறும் என கனவில் கூட நினைத்திருக்க மாட்டார்கள்.


காரணம் இந்தப் படம் வெளியான சூழல் அப்படி. படம் ரிலீசாகும்போது 40 கோடி ரூபாய் இருந்தால்தான் வெளியாகும் என்ற நிலை. சினிமாவில் டெஃபிசிட் என்பார்கள் இதை. வேறு வழியே இல்லாமல், சொத்து ஒன்றை அடகு வைத்திருக்கிறார்கள். க்யூபுக்கு ஒரு நாள் மட்டும் பணம் கட்டிவிட்டு ரிலீஸ் செய்திருக்கிறார் தயாரிப்பாளர். நாயகன் விஜய் ரூ 5 கோடி தன் சம்பளத்தில் விட்டுக் கொடுத்ததாக தகவல். அதை வைத்து ஓரளவு சமாளித்து வெளியிட்டார்கள்.










முதல் நாள் வசூல் பிரமாதமாக அமைந்தது. தயாரிப்பாளர் கொஞ்சம் தெம்பானார். அந்த நேரம் பார்த்துதான் பாஜக தலைவர் தமிழிசையின் 'டுமீல்' கருத்துகள் வெளியாகி மெர்சலாக்கின. அந்தக் கருத்துகளுக்கு வந்த எதிர்வினைகள் படத்தைப் பற்றி அத்தனை தலைவர்கள், கலைஞர்கள், சமூக ஆர்வலர்கள் என அனைவரையும் பேச வைத்தது. ஆதரிக்கவும் வைத்தது.



முக ஸ்டாலின், வைகோ, அன்புமணி ராமதாஸ், சு திருநாவுக்கரசர்... ஏன் ஆளும் அதிமுகவின் அமைச்சர் ஜெயகுமார் என அனைவருமே மெர்சலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.


இன்று தென்னிந்தியா, வட இந்தியா என்ற பேதமின்றி மெர்சல் என்ற தமிழ்ப் படம் பற்றி பேசுகிறார்கள். பிரதான எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியே மெர்சல் விவகாரத்தைக் கையிலெடுத்து பிரதமர் மோடியை ட்விட்டரில் - மரண கலாய் என்பார்களே...- அப்படிக் கலாய்த்து பதிவிட்டிருக்கிறார்.


இன்னும் மோடி மட்டும்தான் மெர்சல் பற்றிப் பேசவேண்டும். அவரும் கூட பேசியிருப்பார், தமிழிசை, பொன் ராதாகிருஷ்ணன் போன்றவர்களிடம். 'வேலில போறதை எடுத்து ஏன்யா வேட்டிக்குள்ள போட்டீங்க' என்கிற ரீதியில் கண்டிருத்திருப்பார். ராகுலின் இன்றைய ட்வீட்டைப் பார்த்த பிறகும் அவர் கண்டிக்காமலிருப்பாரா என்ன?!

No comments:

Post a Comment

Amazon.in || Kids zone ||

PropellerAds