இந்தியாவின் முக்கிய வங்கிகளான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா. எச்டிபெசி வங்கி, ஐசிஐசிஐ வங்கி, ஆக்சிஸ் வங்கி மற்றும் யெஸ் வங்கி உள்ளிட்டவை இந்தியாவின் பிட்காயின் எக்ஸ்சேஞ் கணக்குகளைச் சந்தேகத்திற்குரிய பரிவர்த்தனைகள் நடப்பதாகச் சஸ்பண்டு செய்து அதிரடி நடவடிக்கையினை எடுத்துள்ளனர்.
வங்கிகள் பிட்காயின் எக்ஸ்சேஞ் கணக்கு வைத்துள்ளவர்களிடம் இருந்து கூடுதல் உத்திரவாதத்தினைக் கேட்டு வந்துள்ளனர். அப்படிக் கூடுதல் உத்திரவாதம் அளித்த பிட்காயின் கணக்குகள் மட்டும் இன்னும் செயல்பட்டு வந்தாலும் அவற்றுக்குப் பணத்தினை எடுக்கக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்தியாவில் பிட்காயின் சேவை அளிக்கும் நிறுவனங்கள்
இந்தியாவில் பிட்காயின் சேவை அளித்து வரும் ஸெப்பே, யூனோகோய்ன், காயின்ஷூயர் மற்றும் BtcxIndia உட்பட 10 பிட்காயின் எக்ஸ்சேஞ்சுகள் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அது மட்டும் இல்லாமல் அந்தப் பிட்காயின் எக்ஸ்சேஞ்களின் வங்கி கணக்குகளையும் ஆய்வு செய்து வருவதாகவும் விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.
கருத்து தெரிவிக்க மறுப்பு
வங்கிகள் இது குறித்து எங்களைத் தொடர்புகொள்ளவில்லை என்று யூனோகோய்ன் பிட்காயினின் எக்ஸ்சேஞ் பரமோட்டர் சாத்விக் விஷ்வநாத் கூறியுள்ளார்.
ஸெப்பே, காயின்ஷூயர் மற்றும் BtcxIndia உள்ளிட்ட நிறுவனங்கள் இது குறித்த மின்னஞ்சலுக்குப் பதில் அளிக்கவில்லை. அதே நேரம் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா. எச்டிபெசி வங்கி, ஐசிஐசிஐ வங்கி, ஆக்சிஸ் வங்கி மற்றும் யெஸ் வங்கியும் பதில் அளிக்கவில்லை.
பிட்காயின்
பிட்காயின் ஒரு டிஜிட்டல் கரன்சியாகும், இதனைப் பயன்படுத்தி எந்த ஒரு இடைத்தரகர்களும் இல்லாமல் பொருட்கள் வாங்கலாம், சேவைகளுக்கான கட்டணத்தினைச் செலுத்தலாம். சில நாடுகளில் இந்தப் பிட்காயின் தடை செய்யப்பட்டு இருந்தாலும் முதலீடாக இதனை வாங்கலாம்.
இந்தியாவில் பிட்காயின்
இந்தியாவில் பிட்காயின் போன்ற கிரிப்டோகரன்சிகளைத் தடை செய்யவில்லை என்றாலும் இது சட்ட வரம்பிற்குட்பட்டது இல்லை என்றும் முதலீடு செய்வது என்பது தனிப்பட்ட நபர்களின் ரிஸ்க் என்று ஆர்பிஐ மற்றும் நிதி அமைச்சர் அருண் ஜேட்லியும் தெரிவித்துள்ளனர்.
இந்திய பிட்காயின் எக்ஸ்சேஞ்கள் பெற்ற வருவாய் எவ்வளவு
இந்தியாவில் உள்ள டாப் 10 பிட்காயின் எக்ஸ்சேஞ்கள் மட்டும் 40,0000 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வருவாயினை ஈட்டியுள்ளன.
வருமான வரித் துறை
No comments:
Post a Comment