ஐடி ஊழியர்களுக்கு அமெரிக்கா மட்டும் இல்லை இந்தியாவிலும் தான் பிரச்சனை உள்ளது: நாஸ்காம்
சென்னை: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தலைமையிலான அரசு அமெரிக்கப் பொருட்களை வங்க வேண்டும் மற்றும் அமெரிக்கர்களை மட்டும் பணிக்கு எடுக்க வேண்டும் எச்1-பி விசா சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதால் 5,00,000 இந்திய ஐடி ஊழியர்கள் நாடு திரும்பும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இது செய்தியாக வெளிவந்த அடுத்த நாளே இந்திய ஐடி துறைகளை நிர்வகிக்கும் நாஸ்காமின் தலைவரான ஆர் சந்திரசேகர ஐடி ஊழியர்களுக்கு அமெரிக்கா மட்டும் இல்லை இந்தியாவிலும் தான் பிரச்சனை உள்ளது என்று கூறியுள்ளார்.
இந்திய ஐடி ஊழியர்கள் :
.
இந்திய ஐடி ஊழியர்கள் ஏற்கனவே அதிகளவில் பணி நீக்கம் போன்றவற்றில் சிக்கித் தவித்து வருகின்றனர். மறுபக்கம் இந்தியாவின் டாப் ஐந்து ஐடி நிறுவனங்களான டிசிஎஸ், இன்ஃபோசிஸ், விப்ரோ, காக்னிசென்ட், டெக் மகேந்திரா போன்றவற்றில் புதிதாக ஆட்களைப் பனிக்கு எடுப்பதும் குறைந்து வருகிறது.
நாஸ்காம் :
நாஸ்காம் நிறுவனத்தின தலைவர் ஆர் சந்திரசேகர இன்று ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டி ஒன்றில் அமெரிக்காவில் இருந்து ஐடி ஊழியர்கள் இந்தியாவிற்கு வந்தாலும் அவர்கள் தங்களது திறனைப் புதுப்பித்துக்கொள்ள வேண்டும் என்றும் இல்லை என்றால் தொடர்ந்து பணியில் நீட்டிக்க முடியாது என்று கூறியுள்ளார்.
பணி நீக்கத்தில் சிக்கும் ஊழியர்கள்:
ஏற்கனவே இந்திய ஐடி நிறுவனங்கள் திறன் குறைவாக உள்ள ஊழியர்கள் மற்றும் புதிய தொழில்நுட்பங்களுக்குத் தங்களை மாற்றிக்கொள்ள முடியாத ஊழியர்கள், மூத்த ஊழியர்கள் போன்றவர்களை விருப்பு ஓய்வு பெற்றுக்கொண்டு செல்லுமாறு கூறி வருகின்றன.
காக்னிசென்ட் :
சரியாக ஒரு வருடத்திற்கு முன்பு காக்னிசென்ட் நிறுவனம் 800-க்கும் மேற்பட்ட மூத்த அதிகாரிகளை 9 மாதம் சம்பளத்தினைப் பெற்றுக்கொண்டு வெளியேறுமாறு அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
வெரிசான் யாகூ:
நிறுவனத்தினை வாங்கியுள்ள வெரிசான் நிறுவனம் சென்னை, பெங்களூரு, ஹைதராபாத்தில் ஊழியர்களைக் குண்டர்களை வைத்து மிரட்டி ராஜிநாமா செய்ய வைப்பதாகவும் செய்திகள் வெளியாகிப் பரபரப்பினை ஏற்படுத்தியது.
கர்நாடக அரசு:
கர்நாடக அரசும் ஐடி துறை ஊழியர்கள் தங்களுக்கு ஊழியர்கள் சங்கம் வேண்டும் வைத்துக் கோரிக்கையினை நிராகரித்துத் திறனை மேம்படுத்திப் புதிய தொழில்நுட்பங்களுக்கு மாற முடியவில்லை என்றால் பணியை விட்டு விலக்கிக்கொள்ளுங்கள் என்ற தொற்றத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
என்ன செய்வது? கடந்த ஒரு வருடமாக இந்தியாவின் முக்கிய ஐடி நிறுவனங்கள் பல ஊழியர்கள் குறைப்பை செய்து வரும் நிலையில் அமெரிக்காவில் இருந்து ஊழியர்கள் திருப்பி அனுப்பப்பட்டால் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற பிற நாடுகளும் இதனைப் பின்பற்ற அதிக வாய்ப்புகள் உள்ளது. எனவே ஐடி நிறுவன ஊழியர்கள் தங்களது தொழில்நுட்ப திறனை எப்படி உயர்த்திக்கொள்வது என்று கவனம் செலுத்துவது தான் சிறந்தது.
No comments:
Post a Comment