Amazon.in || Book ||

Friday, 5 January 2018

கச்சா எண்ணை உற்பத்தியில் கொடி கட்டி பறந்த சவுதியின் பொற்காலம் முடிவுக்கு வருகிறது

உலகில் கச்சா எண்ணெய் உற்பத்தியில் கொடி கட்டி பறந்து வரும் சவுதியின் பொற்காலம் முடிவுக்கு வரும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

சவுதி அரேபியா தான் கச்சா எண்ணெய் உற்பத்தியில் முன்னிலை வகிக்கிறது. அந்த நாட்டின் மொத்த வருமானத்தில் 90 சதவிகித வருமானம் எண்ணெய் பொருட்கள் மூலம் தான் வருகிறது.அதேபோல் ஐக்கிய அரபு அமீரகம் இதில் முன்னிலை வகிக்கிறது. 80 சதவிகித வருமானம் அந்த நாட்டிற்கு இதன் மூலம் கிடைக்கிறது. மேலும் ரஷ்யாவும் இந்த பட்டியலில் முன்னிலை வகிக்கிறது. இதைத் தொடர்ந்து அமெரிக்காவும் கடந்த 30 ஆண்டுகளாக கச்சா எண்ணெய் உற்பத்தி செய்து வருகிறது.

கடந்த 2016-ஆம் ஆண்டு அமெரிக்காவின் கச்சா எண்ணை உற்பத்தி மிகவும் மோசமாக இருந்தது. அதுமட்டுமின்றி கச்சா எண்ணை உற்பத்தியில் கடந்த 1975-ஆம் ஆண்டில் இருந்தே ரஷ்யாவும், சவுதியும் தனி சாம்ராஜ்யம் நடத்தி வந்தன.


இந்நிலையில் தற்போது அமெரிக்காவின் கச்சா எண்ணெய் உற்பத்தி மிகவும் வேகமாக அதிகரித்து இருக்கிறது.2017-ஆம் ஆண்டு கச்சா எண்ணெய் உற்பத்தியில் அமெரிக்கா அசுர வளர்ச்சி அடைந்ததுள்ளது என்றும் 2018 உற்பத்தி தற்போது இருப்பது போல் தொடர்ந்தால் அமெரிக்கா இதில் முதல் இடம் பிடித்தவிடும் என்று கூறப்படுகிறது.

No comments:

Post a Comment

Amazon.in || Kids zone ||

PropellerAds