திருமண நிகழ்ச்சியில் முக்கியமானது மணமகன், மணமகள் கழுத்தில் மாங்கல்யம் சூட்டுதலாகும். எல்லோரும் ஆவலோடு எதிர்பார்க்கும் அந்நிகழ்வில் மணமகன், மணமகள் கழுத்தில் தாலி கட்டும்போது கீழ்க் கண்ட மந்திரத்தைச் சொல்கிறார்கள்.
(தற்காலத்தில் திருமணப் புரோகிதர் கூறும் மந்திரத்தைச் செவியில் வாங்கி வாயால் கூறும் – புரிந்து சொல்லும் – நிலையில் மணமகன் இல்லாததால், புரோகிதரே அதைக் கூறி விடுகிறார்.)
எப்போது இவ்வொலி எழுப்பப் படும் என்று எதிர் பார்த்திருப்பவர்கள், மங்கல மலரோடு கூடிய மஞ்சள் அரிசியை (அட்சதையை) மணமக்கள் மீது வாழ்த்தித் தூவுவதாகக் கருதி முன்னால் அமர்ந்திருப்போரின் தலைகள் மீது வீசிவிட்டு உணவுக்கு அவசரமாகச் செல்கிறார்கள். காலம் அவர்களைத் துரத்துகிறது.
மாங்கல்யம் தந்துனானேன ம்மஜீவன ஹேதுநா
கண்டே பத்தாமி ஸூபகே த்வம்ஜீவ சரதஸ் சதம்
என்பதே மாங்கல்யம் சூட்டுவதற்குரிய மந்திரமாகும்.
கண்டே பத்தாமி ஸூபகே த்வம்ஜீவ சரதஸ் சதம்
என்பதே மாங்கல்யம் சூட்டுவதற்குரிய மந்திரமாகும்.
மங்கள வடிவாகத் திகழும் பெண்ணே! உன்னுடன் தொடங்கும் இல்லற வாழ்வு எனக்கு நன்றாக அமைய வேண்டும். என்னுடைய ஜீவனுக்கு (ஆன்மாவுக்கு) இதமானதே தரவேண்டும் என்று உறுதி கூறி இந்தத் திருமாங்கல்ய நூலை உன் கழுத்தில் அணிவிக்கின்றேன். என் இல்லறத் துணையாக அனைத்து இன்ப, துன்பங்களிலும் பங்கேற்று நிறைந்த யோகத்துடன் நீ நூறாண்டுக் காலம் வாழ்வாயாக! என்பதாகும்.
No comments:
Post a Comment