Amazon.in || Book ||

Wednesday 24 January 2018

பழநி , திண்டுக்கல் அருகே 700 ஆண்டுகள் பழமையான சிவன்கோயில் கண்டுபிடிப்பு


பழநி , திண்டுக்கல் அருகே 700 ஆண்டுகள் பழமையான சிவன்கோயில் கண்டுபிடிப்பு




பழநி, திண்டுக்கல் அருகே பாடியூரில் 700 ஆண்டுகளுக்கு முந்தைய சிவன்கோயில், சிலைகள், கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பழநியைச் சேர்ந்த தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி, பழநி யாண்டவர் கலைக்கல்லுாரி பேராசிரியர்கள் அசோகன், மனோகரன், ஸ்ரீராஜா, ஆய்வுமாணவர்கள் வீரகருப்பையா, சேரல்பொழிலன் ஆகியோர் திண்டுக்கல் அருகேயுள்ள பாடியூரில் வரலாற்று ஆய்வு மேற்கொண்டனர். 




பாடியூர் கிழக்கே, எழுத்துப்பாறை எனப்படும் இடத்தில் ஆய்வு செய்தனர். அதில் கி.பி.,13ம் நுாற்றாண்டைச் சேர்ந்த சுந்தரபாண்டியர் காலத்திய கல்வெட்டு உள்ளது. 700 ஆண்டுகள் பழமையான அப்பகுதியில் இருந்த சிவன்கோயில், அதற்கு வழங்கிய கொடை விபரங்கள் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.



நாராயணமூர்த்தி கூறியதாவது: கல்வெட்டு முழுமையாக படிக்கமுடியாத அளவிற்கு சிதைந்துள்ளது. இக்கல்வெட்டு மூலம், அழிந்த சிவன்கோயிலில் கணக்கு எழுதுபவர் பெயர் கூத்தாண்டானான தென்னவன் என்று தெரிகிறது. வேளாண் கூத்தன், படிபுத்திரன் என பாடியூரைச் சேர்ந்த பலரது பெயர்கள் உள்ளன. அவற்றை முழுமையாக படிக்க முடியாத அளவிற்கு அழிந்துள்ளன. சிவன் கோயிலுக்கு சிலர் நிலத்தை கொடையாக அளித்தும் அதற்கு, கடமை, குடிமை போன்ற வரிகள் நீக்கியுள்ளதும் தெரியவந்துள்ளது.கோயில் இருந்ததற்கு அடையாளமாக திரிசூலம் சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது. 





நந்தி சிலையும் உள்ளது. மரம், செங்கலால் கோயில் கட்டப்பட்டிருக்க வேண்டும். அதற்கான சிதிலங்கள் உள்ளது. இதனால் கோயிலில் கல்வெட்டை பொறிக்காமல், அருகே பாறையில் எழுதியுள்ளனர் என்றார்.

No comments:

Post a Comment

Amazon.in || Kids zone ||

PropellerAds