Amazon.in || Book ||

Sunday 21 January 2018

ஜனவரி 31ல் சந்திரகிரகணம்: பரிகாரம் செய்ய வேண்டிய நட்சத்திரங்கள்




ஜனவரி 31ல் சந்திரகிரகணம்: பரிகாரம் செய்ய வேண்டிய நட்சத்திரங்கள்










சென்னை: ஹேவிளம்பி வருஷம் தை மாதம் 18 ஆம் நாள் 31.1.2018 புதன் கிழமை பெளர்ணமி தினத்தன்று பூசம் நட்சத்திரத்தில், ஆயில்யம் நட்சத்திரம் 1 ஆம் பாதம் கடகம் இராசியில் கன்னியா லக்கினத்தில் சந்திர கிரகணம் ஆரம்பம் ஆகி முடிவடைகிறது. 


கிரஹணத்தை வானவியல் அடிப்படையில் விளக்க வேண்டுமென்றால், ஒரு வானியல் பொருள், வேறொரு பொருளினால் மறைக்கப்படுவது அல்லது ஒரு பார்வையாளர் பார்க்கும் போது, ஒரு பொருள் நகர்ந்து செல்லும் போது, ஏற்கனவே இருக்கும் பொருளை மறைப்பது போன்று தோன்றும் காட்சியாகும். சந்திர கிரகண தோஷமுள்ள நட்சத்திரங்கள் புனர்பூசம், பூசம், ஆயில்யம், மகம், அனுசம், கேட்டை, உத்திரட்டாதி, ரேவதி. 



ஜனவரி 31ல் சந்திரகிரகணம்






 ஜனவரி 31ஆம் தேதி சந்திர கிரகணம் ஆரம்ப காலம் மாலை 5.16 க்கு மத்திய காலம் இரவு மணி 6.58 க்கு சந்திர கிரகண இரவு 8.40 க்கு முடிவடைகிறது. 







பரிகாரம் செய்ய வேண்டிய நட்சத்திரகாரர்கள் 


புதன் கிழமை பிறந்தவர்கள் சாந்தி செய்து கொள்ள வேண்டும். அதே போல, புனர்பூசம், பூசம், ஆயில்யம், விசாகம், கேட்டை, பூரட்டாதி, அனுஷம், உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சாந்தி செய்து கொள்ள வேண்டும். 


சூரிய, சந்திர கிரகணங்கள்



 வானவியலின் அடிப்படையில் தான் ஜோதிடம் அமைந்திருக்கிறது என்றாலும் கிரஹணம் பற்றிய கருத்தில் வானிவியலும் ஜோதிடமும் சிறிது மாறுபட்டு நிற்கிறது. வானவியலில் சூரியன் அல்லது சந்திரன் மீது ஏற்படும் நிழலை கிரஹணம் என கூறுகிறது. சூரிய கிரகணம், அமாவாசை நாளிலும், சந்திர கிரகணம் முழு நிலவு நாளிலும் உண்டாகிறது. எல்லா முழு நிலா நாளிலும் சந்திர கிரகணம் உண்டாவது இல்லை.


ராகு - கேது 




ஜோதிடத்தில் நிழல் கிரஹங்களான ராகு மற்றும் கேதுவும் சூரியன் மற்றும் சந்திரனோடு இனைவதை கிரஹணம் என கூறுகிறது. சூரிய கிரகணம் ஏற்படும் அமாவாசை நாளில் - சூரியன், சந்திரன், ராகு ஒரே வீட்டில் இருக்கும். சந்திர கிரகணம் ஏற்படும். பௌர்ணமி நாளில் - சந்திரன் - ராகு, சந்திரன்-கேது, சூரியன்-ராகு, சூரியன்-கேது எதிர்எதிர் ராசிகளில் இருக்கும். எல்லா நேரங்களிலும் சூரியனும் சந்திரனும் ராகு அல்லது கேதுவோடு ஒரே வீட்டில் இனைந்திருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என கூறுகிறார்கள் சில பஞ்சாங்க கணித வல்லுநர்கள். ஒரு குறிப்பிட்ட பாகை வித்தியாசத்தில் அடுத்தடுத்த வீடுகளில் நின்றாலும் கிரஹணம் நிகழும் என கூறியுள்ளனர். 


சந்திர தரிசணம் 




மாலை முதல் சந்திர கிரகணம் முடியும் வரையில் உணவு சாப்பிடக்கூடாது. சிரார்த்தம் மறுநாள் பெளர்ணமி திதியில் செய்ய வேண்டும். கர்ப்பம் அடைந்த பெண்கள் மாலை 5.00 மணி முதல் இரவு 8.50 வரையில் சந்திரனை பார்க்கக் கூடாது. இரவு 9.00 மணிக்கு மேல் சந்திர தரிசனம் செய்யலாம். பூஜை செய்ய நல்ல நேரம் கிரஹணம் விட்ட பின்னர் ஆலயம், வீடு சுத்தப்படுத்தும் நேரம் : 31.1.2018 புதன் கிழமை இரவு மணி 9.40 க்கு ஆலயம் வீடு சுத்தம் செய்து குளித்து விட்டு அவரவர் சம்பிரதாயப்படி பூஜை செய்து கொள்ள வேண்டும்

No comments:

Post a Comment

Amazon.in || Kids zone ||

PropellerAds