Amazon.in || Book ||

Monday, 11 December 2017

வெள்ளியங்கிரி மலை



வெள்ளியங்கிரி மலை (Velliangiri Mountains) :

                                       
 தமிழ்நாடு கோயம்புத்தூரிலிருந்து 40 கிமீ தொலைவில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர். தென்கயிலை என பக்தர்களால் அழைக்கப்படும் வெள்ளியங்கிரி மலையானது கொட்டும் பனியும், கை தொட்டு விளையாடும் உயரத்தில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளியங்கிரி மலை ஒரு புனிதத் தலமாகவும், சுற்றுலாத்தலமாகவும் இருந்து வருகிறது. இது மேகங்களும் சூழ, வெள்ளி வார்ப்படத்தால் மூடியது போல தோற்றமளிப்பதால் "வெள்ளியங்கிரி" என்ற பெயர் பெற்றது. இம் மலையடிவாரம் பூண்டி என அழைக்கப்படுகிறது. சுமார் 3500 அடி உயரமுடைய (கடல் மட்டத்திலிருந்து 5000 அடி,1524 m) இம்மலை ஏழு சிகரங்களைக் கொண்டுள்ளது. ஐந்தரை கிலோ மீட்டர் தூரம் செல்லும் இப்பாதையில் வெள்ளை விநாயகர் கோயில், பாம்பாட்டி சுனை, கைதட்டி சுனை, சீதைவனம், அர்ச்சுனன் வில், பீமன் களி உருண்டை, ஆண்டி சுனை போன்ற இடங்களை கண்டு மகிழ்ந்து செல்லலாம்.இரவில், மலையில் காட்டு யானைகள் மற்றும் விலங்குகளின் நடமாட்டம் தொடங்கிவிடும் என்பதால் இங்கிருந்து மாலையிலேயே திரும்பி விடுதல் பாதுகாப்பானது என்று சொல்லபடுகிறது ஆனால் அனைவரும் இரவில் பயணத்தை தொடங்கி அதிகாலை மலை உச்சிக்கு சென்று சேர்கிறார்கள். அதிக மக்கள் நடமாட்டத்தால் வனவிலங்குகள் அங்கு இருப்பதை தவிர்க்கின்றன.

No comments:

Post a Comment

Amazon.in || Kids zone ||

PropellerAds