Amazon.in || Book ||

Friday, 1 December 2017

தெற்கு அந்தமான் பகுதியில் புதிய வலுவான காற்றழுத்த நிலை : வானிலை மைய இயக்குனர் அறிவிப்பு

சென்னை : வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் சென்னையில் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்துள்ளார். இதில் அவர் செய்தியாளர்களிடம் கூறியது பின் வருமாறு- தென் கிழக்கு அரபிக் கடலில் நிலவும் ஓகி புயல் தீவிர புயலாக வலுவடைந்து இன்று டிசம்பர் 1ம் கலாய் 8.30 மணி அளவில் லட்சத்தீவு பகுதிகளில் உள்ள தீவில் இருந்து தென்கிழக்கே 270கிமீ தொலைவில் மையம் கொண்டுள்ளது.
இது மேலும் வலுப்பெற்று வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் லட்சத்தீவுகளை கடந்து செல்லும். மேலும் தற்பொழுது தெற்கு அந்தமான் பகுதிகளில் வலுவான காற்றழுத்த பகுதி நிலவுகிறது. இது அடுத்து வரும் இரு தினங்களில் (டிசம்பர் 1, 2) காற்றழுத்த தாழ்வு மணடலமாக வலுப்பெறக்கூடும். மேலும் இது அடுத்து வரும் 3 அல்லது 4 தினங்களில் வட மேற்கு திசையின் வட தமிழம் மற்றும் தென் ஆந்திர கரையை நோக்கி நகரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
மழையை பொறுத்தவரை கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக பாபநாசத்தில் 45 செமீ மழை பதிவாகியுள்ளது. தமிழகம் மற்றும் புதுவையில் ஏராளத்தாழ 21 இடங்களில் மிக கனமழை பெய்துள்ளது. இந்த ஒகி புயல் காரணமாக கடந்த அக்டோபர் 1ம் முதல் நவம்பர் 27ம் வரையிலான காலக் கட்டத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட 18 சதவீதம் குறைவாக இருந்த நிலையில் இன்று தற்பொழுது இயல்பை விட 4% சதவீதம் மட்டுமே குறைவாக உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Amazon.in || Kids zone ||

PropellerAds