Amazon.in || Book ||

Sunday, 8 October 2017

திடீர் ஜிஎஸ்டி வரிச்சலுகையின் பின்னணி என்ன? மோடியின் சூட்சமம் இதுதான்..!



திடீர் ஜிஎஸ்டி வரிச்சலுகையின் பின்னணி என்ன? மோடியின் சூட்சமம் இதுதான்..!


Saturday, 07 Oct, 8.38 pm

சரக்கு, சேவை வரி (ஜிஎஸ்டி) கவுன்சில் கூட்டத்தில் 27 பொருட்களுக்கான வரி குறைக்கப்பட்டதற்கும், குஜராத் தேர்தலுக்கும் தொடர்பிருப்பதாக சமூகஊடகங்களில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. 

டெல்லியில் நேற்றுமுன்தினம் நடந்த ஜி.எஸ்.டி. கவுன்சில் 27 பொருள்களுக்கான ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டது ஏற்றுமதியாளர்களுக்கான விதிமுறைகளும் தளர்த்தப்பட்டு, சிறு நடுத்தர வர்த்தர்களுக்கு சலுகைகள் அறிவிக்கப்பட்டன. 

குறிப்பாக சாமானிய மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் சப்பாத்தி, காக்ரா உட்பட 27 பொருட்களுக்கான வரி 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாகக் குறைக்கப்பட்டது.

இதில் காக்ரா, நம்கீன் என்பது  குஜராத் மாநில மக்களின்  முக்கிய உணவு பொருளாகும்.

இதன் மீதான ஜிஎஸ்டி வரி குறைப்பு கடும் விமர்சனத்தை எதிர்கொண்டுள்ளது. குஜராத் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் வரும் டிசம்பர் மாதம் நடைபெற உள்ள நிலையில், அம்மாநில மக்களின் வாக்குகளைக் கவரும் வகையில் மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்திருப்பதாக சமூக ஊடகங்களில் குற்றச்சாட்டு கூறப்படுகிறது. 

அது மட்டுமல்லாமல் ஜரிகை வேலைப்பாடுகளுக்கும், செயற்கை பட்டு, பாலிஸ்டர், ஜவுளி, கண்ணாடி பொருட்கள், சிந்தடிக் பட்டு ஆகியவற்றுக்கும் ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டுள்ளது. குஜராத் மாநிலத்தின் முக்கியத் தொழில்களாக இவைகள் கருதப்படுகின்றன. இந்த மாநில மக்களை திருப்திபடுத்தும் நோக்கிலேயே ஜி.எஸ்.டி.கவுன்சில் இந்த முடிவுகளை எடுத்துள்ளதாக விமர்சனம் செய்யப்படுகிறது.

மேலும், ரூ. 50 ஆயிரத்துக்கு மேல் நகை வாங்குபவர்கள் பான் கார்டு எண்ணை நகை வியாபாரிகள் வருமானவரித்துறையினரிடம் தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை என்ற முடிவும் எடுக்கப்பட்டுள்ளது.  குஜராத்தில் ஏராளமான நகை வியாபாரிகளும், வைரம், விலை உயர்ந்த கற்கள் பட்டைதீட்டும் பணியிலும் ஏராளமான வியாபாரிகளும் ஈடுபட்டுள்ளனர். அவர்களை திருப்தி படுத்தும் நோக்கில், தேர்தல் கண்ணோட்டத்துடன் இந்த அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதற்கு ஏற்றார்போல் குஜராத்தில் 2 நாள் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, ஜி.எஸ்.டி. கவுன்சில் அறிவிப்பால், தீபாவளி உங்களுக்கு முன்கூட்டியே வந்துவிட்டது என்று கூறியதும் குஜராத் தேர்தலை கருத்தில் கொண்டே இந்த அறிவிப்பை ஜி.எஸ்.டி. கவுன்சில் எடுத்து இருப்பதாகத் தெரிகிறது.

இந்த நிலையில், பல பொருட்களின் விலையேற்றத்துக்கு முக்கியக் காரணமாக இருக்கும் பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரி விதிப்புக்குள் கொண்டு வர எதிர்க்கட்சிகள் சார்பில்  வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால், இப்போதைக்கு பெட்ரோல், டீசல் ஜிஎஸ்டிக்குள் கொண்டு வரப்படாது என்று அருண் ஜேட்லி திட்டவட்டமாகக் கூறிவிட்டார்

No comments:

Post a Comment

Amazon.in || Kids zone ||

PropellerAds