சென்னை: ஒரே நாள்... ஒரே நாள்தான்... அனைத்து வசூல் சாதனைகளையும் பின்னுக்கு தள்ளியுள்ளது மெர்சல்.
விஜய் நடிப்பில் நேற்று ரிலீஸ் ஆனது மெர்சல் படம். இப்படத்துக்கு மிக பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. மெர்சல் படத்தை பார்த்த ரசிகர்கள் மற்றும் குடும்பங்கள் அனைவரும் படம் நன்றாக உள்ளது என்று தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் சென்னையில் மட்டும் மெர்சல் முதல்நாள் 1.52 கோடி வசூல் செய்துள்ளது என்கிறார்கள். விவேகம் 1.21, கபாலி 1.12 கோடி வசூல் செய்திருந்தது. இதன் மூலம் விவேகம் , கபாலியின் முதல் நாள் வசூலை பின்னுக்கு தள்ளி முதல் இடத்தை பிடித்துள்ளது மெர்சல். செம மெர்சலாக்கி வருகிறது.
No comments:
Post a Comment