சென்னை: மெர்சல் திரைப்படம் வெளியாக சில நாட்களே இருக்கும் நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை நடிகர் விஜய் இன்று திடீரென சந்தித்தார். சென்னை கிரீன்வேஸ் இல்லத்தில் உள்ள முதல்வர் வீட்டில் இந்த சந்திப்பு நடந்தது. மேலும் மெர்சல் படம் வெளியாக உள்ள நிலையில் முதல்வரை ஒரு மணி நேரம் சந்தித்து நடிகர் விஜய் பேசியுள்ளார்.
நடிகர் விஜய் நடிப்பில் தயாராகியுள்ள மெர்சல் திரைப்படம் வரும் புதன்கிழமை திரைக்கு வர இருக்கிறது. படத்தில் உள்ள சில காட்சிகளுக்கு விலங்குகள் நல வாரியம் சான்றளிக்கவில்லை எனக்கூறி இன்னும் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்கவில்லை. இதனால், படம் குறிப்பிட்ட நாளில் வெளியாகுமா? என்ற கேள்வி அவரது ரசிகர்களிடையே எழுந்துள்ளது. இந்த பரபரப்பான சூழ்நிலையில், இன்று நடிகர் விஜய் கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் இல்லத்திற்கு வருகை தந்து, அங்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை ஒரு மணி நேரம் சந்தித்து பேசினார்.
அப்போது செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு உடனிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இந்த சந்திப்பு குறித்து நடிகர் விஜய் கூறுகையில் திரையரங்கு கட்டண நிர்ணயம், கேளிக்கை வரி குறைப்பு தொடர்பாக முதலமைச்சரை சந்தித்து நன்றி தெரிவித்தேன் என்று அவர் கூறினார்.
No comments:
Post a Comment