Amazon.in || Book ||

Sunday, 1 October 2017

ஒரே நாளில் கோடீஸ்வரரான ஏழை மனிதர்: நடந்தது என்ன?

சிறிய வீட்டில் சொற்ப வருமானத்தில் குடும்பம் நடத்தி வந்த நபருக்கு லாட்டரி மூலம் பத்து கோடி பரிசு விழுந்திருப்பதில் அவர் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளார்.
கேரளாவை சேர்ந்தவர் முஸ்தபா (46), தேங்காய் விற்பனை நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.
முஸ்தபா தனது மனைவி, இரண்டு மகன்கள் மற்றும் வயதான தாயுடன் சிறிய வீட்டில் வசித்து வருகிறார்.
இவரின் இரண்டு மகள்களுக்கும் ஏற்கனவே திருமணமாகி விட்டது, லாட்டரி சீட்டு வாங்கும் பழக்கம் கொண்ட முஸ்தபா பம்பர் குலுக்கல் சீட்டு ஒன்றை வாங்கியுள்ளார்.
இதில் அவருக்கு 10 கோடி ரூபாய் பரிசு விழுந்துள்ளது, வரி மற்றும் முகவர் கமிஷன் போக முஸ்தபாவுக்கு ரூ.6.3 கோடி பரிசு தொகை கிடைக்கும்.

தனக்கு பரிசு விழுந்த செய்தியை கேட்டதும் முஸ்தபா மகிழ்ச்சியில் வாயடைத்து போயுள்ளார்.
அவர் கூறுகையில், எனக்கு சிறிய அளவிலான பரிசு லாட்டரியில் விழுந்துள்ளது, ஆனால் இவ்வளவு பெரிய தொகை கிடைத்தது ஆச்சரியமாக உள்ளது.
என் வீடு மிகவும் பழையதாகிவிட்ட நிலையில், அதை உடனடியாக சரி செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன்.
பரிசு பணத்தின் மூலம் நான் வாங்கிய கடன்களை அடைத்து விடுவதோடு, என் உடல் நலக்கோளாறுகளுக்கு நல்ல சிகிச்சையும் எடுத்து கொள்வேன்.
என் இரண்டு மகன்களும் படித்து வரும் நிலையில், தற்போது என்னால் அவர்களுக்கு தரமான கல்வியை அளிக்க முடியும்.
இந்த பரிசை எனக்கு கொடுத்த கடவுளுக்கு நன்றி கூறி கொள்கிறேன் என மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

Amazon.in || Kids zone ||

PropellerAds