முதலில் மிமோ என்றால் என்ன.? அதெப்படி நமது இன்டர்நெட் வேகத்தை அதிகரிக்கும்.? இதன் வழியாக நாம் எப்படி 5ஜி வேகத்தை பெறலாம் ஏன தெளிவை பெறுவோம்.
மல்டிபிள் இன்புட் மல்டிபிள் அவுட்புட் (மிமோ) என்பது ஒரு அடிப்படைசேவை நிலையத்தின் வேகத்தை சுமார் ஐந்து முதல் ஏழு முறை வரை அதிகரிக்கிறது மற்றும் குறுக்கீடுகளும் கணிசமாக குறைக்கிறது, இதனால் சாதனங்களின் டிரான்ஸ்மிஷன் சமிக்ஞை அதிகரிக்கிறது.
50 எம்பிபிஎஸ் வரை.!
குரல் மற்றும் தரவுகளைப் பயன்படுத்தும் ஒரு சந்தாதாரர், சராசரியாக 30எம்பிபிஎஸ் மற்றும் 35 எம்பிபிஎஸ் என்ற அளவிலும், உச்ச நேரங்களில் 50 எம்பிபிஎஸ் வரையிலான தரவு வேகத்தை பெறுவர்.
4ஜி வேகத்தை விட அதிகமான வேகம்.!
ஒப்பீட்டளவில் நீங்கள் தேர்ந்தெடுத்துள்ள 4ஜி திட்டத்தை பொறுத்து, இணைய வேகமானது 4 எம்பிபிஎஸ் முதல் 16எம்பிபிஎஸ் வரை அதிகரிக்கும். அதாவது சுருக்கமாக கூறினால், 5ஜி தொழில்நுட்பம் உருட்டபப்டுவதற்கு முன்னரே 4ஜி வேகத்தை விட அதிகமான வேகத்தை பெறலாம்.
எந்தெந்த நிறுவனம்.?
வோடபோன் இந்தியா, ஐடியா செல்லுலார் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ ஆகிய நிறுவனங்கள் தமது எதிர்கால 5ஜி நெட்வர்க் சார்ந்த தொழில்நுட்பங்களை தயாரிக்கத் தொடங்கியுள்ளன. இப்போது அவர்கள் தமது நெட்வொர்க்குகளில் ஒரு பெரிய அளவிலான மிமோ (MIMO) தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த தயாராகி வருகின்றனர்.
No comments:
Post a Comment